ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன். இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
