தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “மிஸ் யூ”. என் ராஜசேகர் இயக்கத்தில் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இதில் சித்தார்த் உடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார், தேவயாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தின் தலைப்பு முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்ல்க்கு 3பிஎச்கே என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை பார்க்கும்போது 3பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
