கடந்த 26-01-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில். கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தினர் நடத்திய ‘பொங்கல் விழா’ கலந்து கொண்டவர்களின் வாழ்த்துக்களினால் சிறப்பைப் பெற்றதுடன் ஒரு போற்றப்பெறும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் களைகட்டியது.
மேற்படி விழாவில் உப நிகழ்வுகளாக ‘கவிச்சரம்’ நூல் வெளியீட்டு விழா. ‘பாவலர்’ பட்டமளிப்பு விழா. கவியரங்கம் என நீண்டதொரு தமிழ்ப் பண்பாட்டைப் பேணிய விழாவாக தொடர்ந்தது.
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் தலைவர் திரு குமரகுரு கணபதிப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பேராசிரியர்கள் .இ. பாலசுந்தரம் அவர்கள் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர். கவிச்சரம் நூல் பற்றிய அறிமுக உரையையும் பொன்னையா விவேகானந்தன் அவர்கள் வழங்கினார்.
கனடாத் தமிழ்க் கவிஞர்கள் கழகத்தின் இணைந்து கொண்டு மரபுக் கவிதைகளை இயற்றுவது எவ்வாறு என்பதை ஆர்வத்தோடு கற்றுக் கொண்டு இந்த மண்ணில் சிறந்த சந்தக் கவிஞர்களாகக் காட்சிதரும் அன்பர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நல்ல தமிழக் கவிதைகளையும் கருத்துக்களையும் செவிமடுக்க வைத்ததது.
ஆர்வத்துடன் கலந்து கொண்ட பார்வையாளர்கள் மற்றும் விழாவை சிறப்புற ஏற்பாடு செய்த கவிஞர் கழகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரையும் தனது சிறப்புரையில் உதயன் பத்திரிகை ஆசிரியர் பாராட்டினார்.