– சிஜடியிடம் முறையிட போகும். ஈபி.டி.பி அமைப்பாளர் கி. வதனகுமார் –
(கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலச்சம் ரூபா பணம் ஒதுக்கப்ட்டுள்ளதுடன் குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவை நிதி ஓதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது தொடர்பாக சிஜடி யிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் தெரிவித்தார்
மட்டக்களப்பு மத்தியவீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் 7ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளது அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலச்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம் இருந்தபோதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.
இதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல்தந்தனர். இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்தரப்பட்டுள்ளது.
அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடிரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது அது தொடர்பான மேலதிக தகவலை கேட்டிருந்தபோது பிரதேச செயலாளர் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இருந்தும் கடந்த 3ம் திகதி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலின்படி மாவட்ட அரசாங்க அதிபரால் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவலை வழங்கியுள்ளனர் அதன்படி இராசமணிக்கம் ஞாபகாத்த மண்டபம் என இருந்ததை அந்த மண்டபம் ஊடாக பிள்ளையர் ஆலைய பரிபாலனசபைக்கு அந்த 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி கொண்டிருப்பதன் காரணத்தினால் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது மாவட்ட செயலகத்தில் இருந்து வருகின்ற ஒரு தகவல் அதேபோன்று பிரதேச செயலகத்தில் முதற்கட்டமாக ஒரு தகவல் பிறகு இல்லை எனவும் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ளது என வருகின்றது இவ்வாறு தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படுகின்ற விடையங்கள் சரியானமுறையில் தகவலாக வழங்கப்படவில்லை
அதேபோன்று 400 மில்லியன் ரூபா நிதியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது எவ்வளவு நிதி திருப்பி அனுப்பபட்டுள்ளது என்ற தகவலை கேட்டபோது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இந்த சட்டத்தின்; சரத்தின் 5 கீழ் இந்த தகவலை வழங்கமுடியாது என கடிதம் வழங்கியுள்ளார் எனவே இது தனிநபர் சார்ந்த விடையம் அல்ல சட்டத்தின் பிரகாரம் தகவல் வழங்கவேண்டும் என்பதை அவர்கள் உணரவேண்டும்
சத்தியசாஜிபாபா சமுத்தி மற்றும் சக்தி இல்லத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளனர்; இதில் சத்தியசாஜிபாபா சமுத்தி என்பது பாரிய நிதிவசதியை கொண்டது அவர்கள் இலவச மருத்துவம் உட்பட பல வேலைகளை செய்துவருகின்றனர் அதேவேளை சக்தி இல்லம் ஒரு தனியாரது இதுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவசர அவசரமாக வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சரியான திட்டமிடல் இன்றி இந்த நிதியினை மோசடி செய்துள்ளனர்
அவ்வாறே எருவில் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு இரண்டுதடவை நிதி ஒதுக்கப்பட்டு பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதுடன் தற்போது ஒதுக்கப்பட்ட 50 இலச்சம் ரூபா நிதியில் கிட்டத்தட்ட 27 இலச்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதே தமிழரசு கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் பிரதேச செயலகம், மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்துள்ளார்
இவ்வாறு மிக மோசமான முறையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலம் அந்த நிதி சுரண்டப்பட்டு பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் முறையான அபிவிருத்தி இடம்பெறவில்லை மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது
எனவே இவ்வாறுனவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இதனை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடங்கிய ஆவனங்களை இலஞ்ச ஊpல் ஆணைக்குழு, இலங்கை கணக்காய்வாளர்கள் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளதுடன் இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றார்.