யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு பாடசாலை மைதானத்தில் 7ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் திறனாய்வில், தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் க.ஸ்ரீகணேசன், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத் தரும், பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ரஜனிகாந்தன், கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கார்த்திகா அகிலன், சமுர்த்தி உத்தியோகத்தர் வை.கிருஷ்ணராசா, சுவிஸ் பழைய மாணவி ஜெ.கிறேஸ்பெல்சியா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அணிநடை, கயிறு இழுத்தல் மற்றும் கலப்பு அஞ்சல் போட்டிகள் சபையோரைக் கவர்ந்தன.