ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது யுவனின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.