இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்தது. இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா, இஸ்ரேல் இடையே ஒப்பந்த முறையில் போர் நிறுத்தப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல லெபனானில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனாலும், ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் 6 பேர் உயிரிழந்தனர்.
![லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Lebanon-israel-attack-6per-pali.jpg)