மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் கோவா நகரில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்திற்கு நேற்று தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அவர்களுக்கு பாதுகாப்பாக ராணுவ வீரர்களும் சென்றனர். அப்போது, அந்த வாகனங்களை குறித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தங்க சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
![மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 32 பேர் உயிரிழப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Mali-jihadist-attack-32per-pali.jpg)