“குழாய் நீரைக் குடித்தால், கவனமாக இருங்கள்”
குடிநீரை சுத்திகரிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நீர் வழங்கல் சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட தரத்தை மீறிய உலோகம் அடங்கிய 25 கொள்கலன்கள் ஏற்கனவே நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமையால் குழாய் நீரால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
குறித்த சுண்ணாம்புக் கல்லில் தேவைக்கு அதிகமாக குரோமியம் இருப்பது விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ.சானக்க பெப்ரவரி 6 ஆம் திகத நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“27 கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளன. குரோமியம். 550 லைம் வந்துள்ளன. இந்த லைம் இலங்கைக்கு வர முன்னர் ஒரு குழு அங்கு சென்று சோதனை செய்துள்ளது. சோதனை செய்திருக்கையில், அதன் பின்னர் இலங்கைக்கு வந்த பின்னர் இலங்கை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, இந்த சுண்ணாம்பு கல்லில் குரோமியம் உள்ளடக்கம் 14 என தெரியவந்துள்ளது. அதாவது இந்த சுண்ணாம்புகளில் குரோமியம் உள்ளடக்கம் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்கும்.”
தரத்தை மீறிய சுண்ணாம்புக் கற்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போதிலும், அவை எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
“என்ன செய்வது? எமக்கு இருக்கும் முதல் கேள்வி, இது இலங்கைக்கு எப்படி வந்தது? ஏனெனில் ஒரு குழு அந்த நாட்டுக்கு சென்று அங்குள்ள குரோமியம் உள்ளடக்கத்தை சரிபார்த்தால், 14 மில்லிகிராம் கொண்ட குரோமியம் எப்படி இலங்கைக்கு வந்தது? இதுதான் முதல் கேள்விய?”
நாட்டிற்குள் பிரவேசித்த தரத்தை மீறிய புற்றுநோயை உண்டாக்கும் உலோகம் அடங்கிய சுண்ணாம்புக் கல்லை அந்த நாட்டுக்கே அனுப்புவதே (மீள் ஏற்றுமதி) வழமையான நடைமுறை எனவும் ஆனால் அதன் தரத்தை மாற்றும் முயற்சி இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
“இரண்டாவது பிரச்சினை, இலங்கைக்கு வருகிறது, இலங்கைக்கு வந்த பின்னர், எங்கள் ஆய்வகத்தில் சோதனை செய்யும் போது 14 மி.கி வருகிறது. கிலோ ஒன்றுக்கு 14 வந்த பின்னர், என்ன செய்வது, அது தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. சரி என்றால் 14 ஆக இருந்தால் உடனே மறு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
ஆனால் இது தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த தனியார் ஆய்வகத்திற்கு சென்றபோது, அங்கும் 14 மி.கி. இருக்கிறது. அதன் பின்னர் வோடர் போர்ட் ஸ்டேன்டட்டை மாற்றுவதற்கு எஸ்.எல்.எஸ்.க்கு அனுப்புகிறது. இங்கு ஸ்டேன்டட்டை மாற்றவும் புதுப்பிக்கவும் அனுப்பப்படுகிறது. யாருடைய நலன்களுக்காக இவை நடக்கின்றன? ”
மக்களின் உயிரைப் பணயம் வைத்து இவ்வாறான முயற்சி யாருடைய நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைய அரசாங்கத்திடம் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
“இலங்கையர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்த, இலங்கையர்களுக்கு சிறுநீரக நோய்களைக் ஏற்படுத்த, உலகில் ஒரு கிலோகிராமுக்கு 10 மில்லிகிராம் காணப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம் யாருக்கு இருந்தது எனக் கேட்க விரும்புகிறோம்.”
குடிநீரை சுத்திகரிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் உலோகம் அடங்கிய சுண்ணாம்புக் கற்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க அம்பலப்படுத்தினார்.
“அதேபோல், இது மறுமலர்ச்சி அரசு எனின், தூய்மையான இலங்கை என்றால், இலங்கைக்கு விசத்துடனான குடிநீர், கௌரவ தலைவரே, இந்த 25 கொள்கலன்களும் இரத்மலானைக்கு சென்றுள்ளன. இரத்மலானை பிளான்ட்டில் சில உள்ளன. காலி பிளான்ட்டில் சில உள்ளன. அம்பத்தலே பிளான்ட்டில் சில உள்ள. இந்த தண்ணீரை குடிப்பவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இன்றிலிருந்து குழாய்த் தண்ணீரைக் குடித்தால் கவனமாக இருங்கள்.”
டீ. வீ. சானக்க வெளிப்படுத்திய பாரதூரமான விடயம் குறித்து ஆராயப்பட வேண்டுமென, எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார்.
“லைம் எனப்படுவது அதன் முக்கிய ஆதாரமாக காணப்படுவது சுண்ணாம்புக்கல். எவ்வாறாயினும், கௌரவ உறுப்பினர் டீ. வீ. சானக்க முன்வைத்த விடயத்தில், அந்த சுண்ணாம்பில் கன உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால், அது ஒரு தீவிரமான நிலை. அதைப் பற்றி நாம் ஆராய வேண்டும்”
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சுண்ணாம்புக் கல்லில் காணப்படும் கன உலோகத்தின் சதவீதம் 14 அல்ல 12 என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.