தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து விஜய், பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Vijay-meets-prashant-kishore.jpg)