தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. தென் ஆப்பிரிக்காவிடம் இருந்த சுதந்திரம் பெற்ற நமீபியா 1990ம் ஆண்டு தனிநாடாக உதயமானது. அந்நாட்டின் முதல் அதிபராக சாம் நுஜோமா (வயது 97) பொறுப்பேற்றார். அவர் 15 ஆண்டுகளாக நைஜீரிய அதிபராக செயல்பட்டார். அதன்பின்னர் அரசியலில் இருந்து விலகிய சாம் நுஜோமா குடும்பத்தினருடன் தலைநகர் விண்ட்ஹொக்கில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாம் நுஜோமா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![நமீபியாவின் முதல் அதிபர் சாம் நுஜோமா மரணம்](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Namibia-first-president-sam-nujoma-maranam.jpg)