இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மகான்’. இதில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாவும் மக்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தநிலையில் மகான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் பாபி சிம்ஹா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மகான் படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இப்படம் என் இதயத்தில் எப்போதும் தனி இடத்தைப் பிடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
!['மகான்' திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் நிறைவு - நடிகர் பாபி சிம்ஹா நெகிழ்ச்சி](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Mahaan-padam-3-years-completes-actor-bobby-simha.jpg)