வடக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. அந்நாட்டின், குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரில் இருந்து நேற்று டபாஸ்கோ நகருக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 48 பேர் பயணித்தனர். எஸ்கார்சிகா என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் எதிரே வந்த லோரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணித்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![மெக்சிகோவில் லோரி மீது பேருந்து மோதி தீ : 41 பேர் உயிரிழப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Mexico-lorry-bus-mothi-burnt-41per-pali.jpg)