(11/2/2025)
இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள்,11ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
அன்று காலை பளை மற்றும் முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்குப்பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பளை மற்றும் முகமாலைப் பகுதியில் ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் டாஸ், கலோரெஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கூறிப்பிடத் தக்கது.