பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் தையட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது செவ்வாய்க்கிழமை 11ம் திகதி அ ன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விகாரையானது பொது மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிலையில் காணியின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர் போராட்டமானது ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முதல் நாளும், பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த போராட்டமானது அன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டமானது 12ம் திகதி புதன்கிழமை பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.