குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருள்நிதி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடை கூட்டியும் அருள்நிதி தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இப்படத்தின் வில்லனாக ஹரீஷ்பேரடி நடிக்கிறார். இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
![அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் பதிவேற்றம்](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Arulnithi-new-pada-update.jpg)