Markham-Thornhill மாகாண தொகுதிக்கான ஒன்றாரியோ புறோகிறசிவ் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் லோகன் கணபதி அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
கடந்த ஒன்றாரியோ அரசாங்கம் முதல்வர் டக் போர்ட் தலைமையில் இயங்கிய பொழுத இரண்டு அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரிய லோகன் கணபதி அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கடந்த 8ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் இடம்பெற்றது.
ஆதரவாளர்கள். கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
லோகன் கணபதி அவர்கள் அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
“எமது கடந்த அரசாங்கத்திற்கும் பல சவால்கள் இருந்தன. பல அபிவிருத்தித் திட்டங்களை நாம் ஆரம்பித்து முடிக்கும் தறுவாயில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நெருக்குவாரம் கனடாவிற்கும் ஒன்றாரியோ போன்ற பெரிய மாகாணங்களுக்கும் எதிராக பிரயோகிக்கப்படுமோ என்ற அச்சம் எமது முதல்வர் டக் போர்ட் போன்ற தலைவர்களையும் பாதித்தது.
இவ்வாறான நிலையில் உடனடியாக தேர்தலை நடத்த எமது முதலவர் மாகாணத்தின் ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த தேர்தலில் எமது கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் மாத்திரமே நாம் ஆரம்பித்த பல அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யலாம்.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் போக்குவரத்துப் பிரச்சனை பூதாகாரமாக பெருகி வருகின்ற வேளையில் 401 நெடுஞ்சாலைக்கு கீழ்ப்பகுதியில் ஒரு சுரங்கப் பாதை அமைத்து அதன் மூலம் 401 நெடுஞ்சாலையின் போக்குவரத்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறான பல தேவைகள் மற்றும் திட்டங்களை அமுல் செய்ய எமது கொன்சர் வேர்ட்டிவ் கட்சியின் அரசாங்கம் மீண்டும் எமது முதல்வர் டக்போர்ட் தலைமையில் அமைய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு காணப்படும் படங்கள் தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் எடுக்கப்பட்டவையாகும்