அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் அனுபவத்தையும் ஆற்றலையும் குறித்து பாராட்டிய அமைச்சர் விஜய் தணிகாசலம் :
கடந்த வாரம் அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் ஸ்காபுறோ வடக்கு தொகுதிக்கான அவரது தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பெற்றது.
அதில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாவிடினும் ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தனது உதவியாளர் ஒருவர் ஊடாக வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி அந்தச் செய்தியை தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்து அமைச்சர் றேமண்ட் சோ அவர்களிடம் ஒப்படைத்தார்.
மேற்படி செய்தியில் விஜேய் தணிகாசலம் அவர்கள் றேமண்ட் சோ அவர்களை பின்வருமாறு வாழ்த்திப் போற்றியுள்ளார்.
றேமண்ட் சோஅவர்கள் ஸ்காபரோவின் உண்மையின் அடையாளமாக திகழ்கிறார். அவர் நகர சபை உறுப்பினராக இருந்த போதும், ஒன்றாரியோ மாநில சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய வருகின்றபோது. எமது தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
ஸ்காபரோவில் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரேமண்ட் சோ அவரம்கள் சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார். அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக சில முக்கியமான வெற்றிகளை எட்டியதில் நானும் பெருமையடைகிறேன். முதன்முறையாக ஸ்காபரோவில் மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வருவதிலும் புதிய பேர்ச்மவுண்ட் மருத்துவமனையைக் கட்டுவதிலும், செஞ்சனரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை விரிவாக்கம் செய்வதிலும் மற்றும் ஸ்காபரோ சப்வே விஸ்தரிப்புத் திட்டங்களிலும் றேமண்ட் சோ, ஆர்வத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டுள்ளார். றேமண்ட் சோ அவர்கள் ஒருபோதும் ஓய்வதில்லை. அவரின் அசாதாரண ஊக்க்ததுடன் ஸ்காபரோ மக்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறார். அனைவரும் இணைந்து றேமண்ட் சோஅவர்களையும், தலைவர் டக் போர்ட் அவர்களையும் இம்மாதம் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாண தேர்தலில் வெற்றியடையச் செய்வோம்”
இவ்வாறு அமைச்சரும் வேட்பாளருமான விஜய் தணிகாசலம் றேமண்ட் சோ அவர்களை மனந்திறந்துங வாழ்த்தியுள்ளார்