தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் துணிவு படத்தை தொடர்ந்து “விடாமுயற்சி” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் அஜித் உடன் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த இப்படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளாமல் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.140 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
