முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், வரு ம் பிப்ரவரி 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள அதுதொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.