‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாக உள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், டிராகன் படம் நடிகர் சிலம்பரசனுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு சிலம்பரசன் முதல் விமர்சனத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, இப்படம் ‘பிளாக் பஸ்டர்’ ஹிட் படமாக அமையும் என அதில் தெரிவித்துள்ளார்.