எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற தேர்தலில் ஸ்காபுறோ வடக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர் தட்ஷா நவநீதன் அவர்களை அவர் போட்டியிடும் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென வேட்பாளர் தட்ஷா நவநீதன் ஆகிய அவரே தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.
ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் நீண்ட காலமாக வசித்த வரும் நானும் எனது குடும்பத்தினரும் இந்த தொகுதி மக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளோம்
எனது கடந்த கால சமூக சேவை மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை நான் எமது வாக்காளப் பெருமக்களுக்கு எடுத்துச் சொல்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
நான் உயர்தர கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் போதே ‘மல்வேர்ன் குடும்ப சேவைகள் நிலையத்தின் ஊடாக தொண்டாற்றத் தொடங்கினேன்
அங்கு இளைஞர்களை நல்வழிப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்தி எவ்வாறு வாழ்க்கையில் உயரலாம் போன்ற கருப்பொருளில் இடம்பெற்ற சில திட்டங்களின் பொறுப்பாளராகவும் பணியாற்றினேன்.
நான் அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றவள். நான் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே சமூக சேவையிலும் அரசியல் தொடர்பான ஆரம்ப செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளேன். அப்போது ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் என்டிபி (NDP) மாணவர் அணியில் இணைந்து என்டிபி கட்சியின் வளர்ச்சிக்காக மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவது மற்றும் மாணவர்கள் ஏன் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பாக தலைமைத்துவம் சார்ந்த பதவிகளில் தொண்டராகப் பணியாற்றி அதன் மூலம் சமூகம் மற்றும் அரசியல் செயற்பாடுகள் பற்றி பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.
2005ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு வரை தமிழ் இளைஞர்கள் மேம்பாட்டு மன்றம் என்ற அமைப்பின் முக்கிய பதவிகளில் இணைந்து தமிழ் இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களை வழி நடத்தும் குழுவின் தலைவியாகவும் இயங்கிவந்தேன்.
2006ம் ஆண்டு நகரசபை அங்கத்தவராக விரும்பி அந்த தேர்தலிலும் போட்டியிட்டேன். அதே வேளை ஜேன்-பின்ச் சந்திப்பின் அருகாமையில் அமைந்துள் இளைஞர் அமைப்பின் முக்கிய பணியாளராக இணைந்து அங்கும் இளைஞர்கள் மத்தியில் தோன்றும் கருத்து வேறுபாடுகள் எவ்வாறு அவர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ந்து அறியும் குழுவில் இணைந்து பணியாற்றினேன்.
தொடர்ந்து இதற்கு முன்னரும் மாகாண அரசின் தேர்தலில் போட்டியிட்டு பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் 2025ம் ஆண்டு தேர்தலில் ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் போட்டியிடுகின்றேன்.
நான் எனது கடந்த காலப் சமூகப் பணிகளின் போது ‘மக்கள் தங்கள் வாக்குகளை ஏன் பயன்படுத்த வேண்டும்?’ எமது வாக்குகள் எமது அரசியல் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நாம் எவ்வாறு வெற்றி கொள்ளலாம்” போன்ற தலைப்புக்களில் மக்களுக்கு பயிற்சியளித்துள்ளேன். அதே உத்திகளை நான் போட்டியிடும் தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்தி மக்களின் ஆதரவை நாடி நிற்கின்றேன்” என்று வேட்பாளர் தட்ஷா நவநீதன் தெரிவித்துள்ளார்.
தட்ஷா மற்றும் ஒன்றாரியோ NDP கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் மிகவும் முக்கியமானவற்றை மக்களுக்கு வழங்க அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்:
– எமது என்டிபி கட்சியின் ஆட்சி ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்தால் நாம் , மாதாந்திர மளிகைச் சலுகைக் கொடுப்பனவு(Grocery Rebate Payment) ஒன்றாரியோ மக்கள் அனைவருக்கும் வழங்க எமது கட்சி தீர்மானித்துள்ளது இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவது முதல் வாடகைச் செலவுகளைச் சமாளிப்பது வரை வாழ்க்கையை மிகவும் மாற்றுகிறது
-பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மாணவர்கள் கற்பதற்கு ஏற்றவையாக திருத்தி சரிசெய்தல் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் நோக்கங்கள் மற்றும் விருப்பங்கள் ஆகியன செழிக்க தேவையான ஆதரவை வழங்குதல்
– அதிகமான மருத்துவர்களை நியமனம் செய்து அல்லது மாகாணத்திற்குள் அழைத்து பணியமர்த்துவதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான கவனிப்பைப் பெற முடியும்
– எங்கள் ஹோம்ஸ் ஒன்டாரியோ திட்டத்தின் மூலம் மக்கள் உண்மையில் வாங்கக்கூடிய வீடுகளைக் கட்டுதல்
– ஒன்ராறியோ வேலைகளைப் பாதுகாத்தல் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டணங்களை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை எமது கட்சியின் 2025ம் ஆண்டு தேர்தலின் முக்கிய பணிகளாக நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்’ என்று தனது நோக்கங்களை பகிர்ந்து கொண்ட அவர் நிறைவு செய்தார்