கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் கதாநாயகனாக வந்த ரியோ ராஜ், அதனைத்தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்திலும் கதாநாயகனாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் அடுத்த பதிவேற்றம் எப்போது என கேட்ட ரசிகருக்கு விரைவில் என யுவன் பதிலளித்திருக்கிறார்
