கனடிய லிபரல் கட்சி தலைமைப் பதவிக்காக போட்டியிடும் முன்னணி வேட்பாளர் Mark Carney ஸ்காபுறோ ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்
19-02-2025 அன்று புதன்கிழமையன்று கனடிய லிபரல் கட்சி தலைமைப் பதவிக்காக போட்டியிடும் முன்னணி வேட்பாளர் Mark Carney அவர்கள்ஸ்காபுறோ கென்னடி கொன்வென்சன் மண்டபத்தியில் அவரை ஆதரிக்கும் அமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
மேற்படி விழா மண்டபத்தில் பல்லின சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில சமூகமளித்திருந்த சமூகத் தலைவர்கள்- ஊடகவியலாளர்கள்- அரசியல் ஆர்வலர்கள்- வர்த்தகப் பிரமுகர்கள்- கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் Mark Carney அவர்கள் உற்சாகமாக உரையாற்றினார்.
மேற்படி கூட்டத்தை ஸ்காபுறோ மத்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சலிமா சாகிட் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் Mark Carney அவர்களை அறிமுகம் செய்த மேடைக்கு அழைக்கும் பணி நமது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு வழங்கப்பெற்றிருந்தது.
அங்கு உரையாற்றிய Mark Carney அவர்கள் கட்சியின் புதிய தலைவரை நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த பின்னர் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி இந்த தேசத்தின் அனைத்து வயதுடைய மக்களுக்காகவும் கடுமையாக உழைத்து கனடா என்னும் அற்புதமான தேசத்தை காப்பாற்றுவோம் என்று கூறிய போது சபையில் கரகோசம் மண்டபத்தின் கூரையையும் அதிரச் செய்தது