நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ.3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
