ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இது அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
