கடந்த 2013-ம் ஆண்டு கவுதம் கார்த்திக்கை தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். கவுதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ரங்கூன்’, ‘முத்துராமலிங்கம்’, ‘தேவராட்டம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்த கவுதம் கார்த்திக் அவரை கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் நடிகர் ஜெயம் ரவி கூட தன் பெயரை ‘ரவி மோகன்’ என மாற்றிக்கொண்டார். அந்த வகையில் நடிகர் கவுதம் கார்த்திக் தன் பெயரை ‘கவுதம் ராம் கார்த்திக்’ என மாற்றி இருக்கிறார். இன்று வெளியாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் பட பதாகை மூலம் அவர் பெயர் மாற்றியுள்ள தகவல் உறுதியாகி இருக்கிறது. அதில் அவரது பெயரை ‘கவுதம் ராம் கார்த்திக்’ என்று குறிப்பிட்டுள்ளனர். ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர் ஆகியோருடன் நடித்திருக்கிறார். நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் தனது பெயரை ‘கவுதம் ராம் கார்த்திக்’ என மாற்றியுள்ளார். ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜூ முருகன் வசனம் எழுதும் படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.