தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் நடிப்பில் உருவாகி உள்ள எமகாதகி படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எமகாதகி. அமானுஷ்ய கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. எதார்த்த காட்சியமைப்புகள் படத்தை பார்க்க தூண்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகும் த்ரில்லர் படம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
