நடிகையான நித்யாமேனன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பாண்டிராஜ் இதற்கு முன் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி இப்படத்தில் பரோட்டா மாஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக விஜய்சேதுபதி பிரத்தியேகமான பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கப்போவதாகவும், வித்தியாசமான கதாப்பத்திரமாக இருக்கும் என நித்யா மேனன் கூறியுள்ளார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் யோகி பாபு, செம்பன் வினோத் ஜோஸ், தீபா ஷங்கர், சரவணன் மற்றும் ரோஷினி ஹரிபிரியன் நடித்துள்ளனர். கதை மற்றும் நடித்த நடிகர்கள் போன்ற பிற தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நித்யா மேனன் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை திரைப்படம் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் போன்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
