– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ரஷ்ய படையெடுப்பிற்கு சில வாரங்களுக்குப் பிறகு 2022இல் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடத் தயாராக உக்ரைன் இருந்தது. ஆனால் அமெரிக்காவின் அன்றைய ஆட்சியாளர்கள் அந்த ஒப்பந்தத்தைத் தடுத்தனர் என்பதும் பலருக்கும் தெரியாத உண்மையாகும்.
வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் தற்போது உக்ரைனிலும் அமெரிக்கர்கள் தங்கள் வேலை முடிந்ததும் அவர்களை குப்பையில் எறிந்துவிட்டு அடுத்த இடத்திற்குச் சென்று விடுவார்கள். அமெரிக்கர்களுக்கு தேவை தங்கமும் தகரமும் தான். இதுவே துயரமிகு வரலாறாக தொடர்கிறது)
உக்ரேனில் 2014 இல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கத்தை கவிழ்த்த அரசியல் எழுச்சியின் பெரும்பகுதிக்கு அமெரிக்காவே காரணம். அதற்கு அப்போது கூறப்பட்ட காரணம் விக்டர் யானுகோவிச்சின் அரசு ரஷ்ய சார்பு நிலையை கொண்டது என்ற குற்றச்சாட்டே.
அத்துடன் டான்பாஸில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் மற்றும் வணிகங்களைத் தாக்கும் பாசிச உக்ரைனிய தேசிய சார்பு தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அள்ளி வழங்கியது.
டான்பாஸில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஜெலென்ஸ்கியின் முயற்சிகளை அமெரிக்கா தடுத்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது முன்னைய உக்ரைனிய அரசியல் இருந்த அமைச்சர்கள் ஆவார்கள்.
உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பது பற்றி ஊக்கமளிக்கும் வகையில் பேச ஜெலென்ஸ்கியை அமெரிக்கா ஊக்குவித்ததுடன், பல்வேறு உக்ரேனிய இராணுவப் பிரிவுகளை நேட்டோ பயிற்சிகளில் ஈர்த்தது.
போருக்கு முன்பாகவே ரஷ்யாவுடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் உக்ரைன் விலக வேண்டும் என்று அமெரிக்கா கடுமையாக வலியுறுத்தியது.
2022 இல், ரஷ்ய படையெடுப்பிற்கு சில வாரங்களுக்குப் பிறகு ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடத் தயாராக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் அன்றைய ஆட்சியாளர்கள் அந்த ஒப்பந்தத்தைத் தடுத்தனர் என்பதும் பலருக்கும் தெரியாத உண்மையாகும்.
ரஷ்யாவுடன் போரிட உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் ஆலோசனை இருந்தபோதிலும், அமெரிக்கக் கருத்தைப் பெறுவதற்காக அமெரிக்கா உக்ரைனை பெரும் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்த கட்டாயப்படுத்தியது. ஆயினும் இந்த தாக்குதல்கள் அனைத்தும் பேரழிவுகளை ஏற்படுத்தின.
உக்ரைன் ஜெலென்ஸ்கி தோல்வி:
ஜெலென்ஸ்கியின் மேற்கத்திய ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டு வருகின்றனர். மேலும் அவரது நேட்டோவுல் இணையும் திட்டமும் சரிவரவில்லை.
இப் போர் முடிவுக்கு வருவதற்கு உக்ரைனே பொறுப்பேற்க வேண்டும் என டிரம்ப் சொன்னதை அடுத்து உக்ரைனிய அரசு ஆடிப்போயுள்ளது.
ஜெலென்ஸ்கி செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். அவரது ஆட்சி காலத்தில் மக்கள் ஆதரவு எண்ணிக்கை பெரிதாக இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மூன்று வருட போரில் உக்ரைனின் இராணுவம் பாரியளவில் அழிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ஒரு மில்லியன் வீரர்கள் வரை காயமடைந்து உள்ளனர். பல லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக ஊனமுற்றனர். ஆனால் இந்த உண்மையே மிகவும் கொடூரமானது.
இதனால் என்ன பயன் என தெரியவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கி ஒருபோதும் சாத்தியப்படாத நேட்டோ தலையீட்டை தக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவரது மக்கள் வெல்ல முடியாத போரை நடத்தி என்ன பயன் என்று கேள்வி எழுப்பினர்.
போரின் விளைவால் உக்ரைனின் பொருளாதாரம் பாரியளவில் சிதைந்துள்ளது. அதன் வர்த்தக உள்கட்டமைப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரேனிய இராணுவம் தாக்குதல் வலுவானது குறைந்துள்ளது.
மேற்கத்திய தலைவர்கள் தங்கள் நாட்டின் ஆதரவை தூர விலக்கிக் கொள்கிறார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நூற்றுக்கணக்கான பில்லியன்களை கொட்டி வீணாக்கின. ஆனாலும் உக்ரைன் தன் நிலத்தையும் உயிர்களையும் பலியிட்டு கண்ட பலன் ஏதுமில்லை.
புவிசார் அரசியல் விளையாட்டு களத்தில் உக்ரைன் தன்னை அநியாயமாக பலியிட்டுள்ளது. ஆனாலும் ஓர் உண்மையை மறுக்க முடியாது. நீண்ட காலம் இப் போர் தொடருமாயின், உக்ரைன் முழுமையாக சரணடைவதைக் காண வேண்டி வரும். அதனைத் தவிர்க்கவே அமெரிக்கா போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் முடிவை வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு:
இப்போது உக்ரைனிய அரசு காணும் தோல்விக்கு நேரடியாக அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.
போர் உக்ரைனுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இப்போரில்
உக்ரைனை மேலும் மேலும் துருப்புக்களை முன்னணியில் ஈடுபடுத்த அமெரிக்க இராணுவ ஆலோசனைகளே என்றும் கூறப்பட்டது.
அதேவேளை நேட்டோ தொடர்ந்து உக்ரைனுக்குத் தேவையான குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் உக்ரைனிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் இப்போரில் தோற்கும் என்பது தெளிவாகத் தெரிந்ததும், அமெரிக்கா சவுதி அரேபியாவில் திட்டமிட்டே ‘சமாதானப் பேச்சுவார்த்தைகளில்’ ஈடுபட்டது. அதன் பின்னர் உக்ரைன் தரப்பை பேச்சு வார்த்தையில் இருந்தும் விலக்கியது.
மற்றோரு உண்மை என்னவென்றால் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் – அமெரிக்கா உக்ரைனை மெதுவாக ஒதுக்கித் தள்ளி, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கனிம சொத்துக்களை
இழப்பீடு கோரியுள்ளது.
தற்போது மிகவும் அவமானமாக, ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைனையே குற்றம் சாட்டுகிறார் அதிபர் டிரம்ப். அவர்கள் இதையெல்லாம் நிறுத்த ஒரு ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
ஆனால் இந்த உண்மைகளை மூடி மறைத்தே அமெரிக்கா அடிக்கடி அமைதியைத் தடுத்தது, போரையும் தொடரச் செய்தது.
இப்போது ரஷ்யாவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உக்ரைனோ ஐரோப்பாவோ அழைக்கப்படவில்லை என்பது நேட்டோ நாடுகளின் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது.
உக்ரைனின் தோல்விக்கான காரணங்களையும் தனது போக்கில் டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.
உக்ரைனின் பொருளாதாரம் பாரியளவில் சிதைந்துள்ளது. அதன் அரசின் உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் பெரும் நிலப்பரப்பு ரஷ்யாவிடம் இழக்கப்பட்டுள்ளது.
இந்த தேவையற்ற போரில் பல்லாயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வரலாற்றில் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகளுக்காக வக்காலத்து வாங்கி போராடும் போது இதுதான் நடக்கும்.
வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் தற்போது உக்ரைனிலும் அமெரிக்கர்கள் தங்கள் வேலை முடிந்ததும் அவர்களை குப்பையில் எறிந்துவிட்டு அடுத்த இடத்திற்குச் சென்று விடுவார்கள். அமெரிக்கர்களுக்கு தேவை தங்கமும் தகரமும் தான். இதுவே துயரமிகு வரலாறாக தொடர்கிறது.