லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படக்குழு, இப்படத்தில் நடித்து வரும் நடிகர்களின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டனர். அதன்படி இப்படத்தில் நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு புதிய பதாகையை வெளியிட்டு பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.