நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
