நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். மேலும் டிரைன், ஜன நாயகன், சலார் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ‘தி ஐ’ என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதி உடன் மார்க் ரவுலி, அன்னா சவ்வா, லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மெலனி டிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் இந்த படம் நாளை மும்பையில் வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
