இலங்கையின் வட மாகாணத்தில் 7 எரிபொருள் விற்பனை நிலையத்தில் அமெரிக்க பெற்றோல் shell நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ந.லோகதயாளன்.
வடக்கிலும் 7 எரிபொருள் விற்பனை நிலையங்களில் அமெரிக்க எரிபொருள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று முன்தினம் அமெரிக்காவின் எரிபொருள் விற்பனை நிலையமான shell விற்பனை நிலையம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி செனங் திறந்து வைத்த அதேநேரம் இலங்கை முழுவதும் விரைவில் இதே கிளைகள் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய வடக்கில் இருந்து முதல் கட்டமாக 7 எரிபொருள் நிலையங்கள் அமெரிக்க நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ளன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கைதடி,
இருபாலை, புன்னாலைக்கட்டுவன் மற்றும் ஊறணிப் பகுதியில் உள்ள நான்கு எரிபொருள் விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் எஸ்.கே.நாதனின் எரிபொருள் விற்பனை நிலையமும், வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின்
கே.எம்.லியகத் அலி எரிபொருள் விற்பனை நிலையமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலைப் பகுதியில் உள்ள மகேந்திரன் எரிபொருள் விற்பனை நிலையமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை எந்தவொரு எரிபொருள் விற்பனை நிலையமும் அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது