முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் முன்னோட்டத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
