இந்தியா- வங்காளதேசம் இடயேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வங்காளதேச தலைமை ஆலோசர் முகம்மது யூனுஸ் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த முறையில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதும் மிகச்சிறந்த வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை எங்கள் இருநாடுகளையும் தனிமைப்படுத்த முடியாது. இருப்பினும், 2 நாடுகளிடையே சில மோதல்கள் எழுந்துள்ளன. தவறான பிரச்சாரம் காரணமாக இந்த மோதல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, எங்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் எழுந்துள்ளது. அந்த தவறான புரிதலை நாங்கள் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் முயற்சித்து வருகிறோம்” என்றார்.
