தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
