ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசும்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது: உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் போராடி வருகின்றன. அங்கு மக்கள் தொகை இல்லை. ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அவற்றை இயக்க (செயல்படுத்த) மக்கள் இல்லை. ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவர்களுடைய பொருளாதாரத்திற்கு வயது முதிர்ந்த குடிமக்கள் மிகப்பெரிய சவலாக மாறிவருகின்றனர். எனினும், இந்த விவசயத்தில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படாத நாடாக இருக்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
