திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லோரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேஜி கண்டிகை பகுதியில் நடந்த இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் நடந்து வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .
