செல்வம் அடைக்கலநாதன், MP
(எஸ்.ஆர்.லெம்பேட்)
(6/03/2025)
மீனவர் பிரச்சினையை வைத்துக் கொண்டு எமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 5ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய டோலர் படகுகளின் வருகை குறையுமாக இருந்தால் அதற்கான இந்தியா மற்றும் தமிழ் நாட்டுடன் பகைக்காமல் மாற்றுத் திட்டத்தை வழங்குவதாக கூறினர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக பிரதமராக மன்மோங் சிங் இருந்த போது ஆழ் கடல் மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தினால் பிரச்சினையை தீர்க்கும் என்று நாங்கள் அவரிடம் கூறினோம். இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சரை கேட்கின்றோம். டில்லி அரசாங்கத்துடனும் பேசுவோம் என்றார்.