திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி அவர்கள் கோலாலம்பூரில் உள்ள தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியா அங்கத்தினர்களை சந்தித்து, ஜூலை மாதம் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெறும் கல்கி ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு விடுத்தார். மேலும் அங்கு நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் ஆன்மீக சிறப்புரையாற்றினார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொள்கைகளை மலேசியாவில் மென்மேலும் பரப்புவதற்கான முயற்சிகளை குறித்து விவாதித்தனர். அதன் பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்மீக புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் மூலம் அவர்கள் இளம் வயதிலேயே கடவுளை குறித்த அன்பையும் அவருடைய வழிகாட்டுதல்களையும் தங்களுடைய வாழ்க்கையிலே உணர்ந்து கொள்வார்கள்.
தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியாவைச் சேர்ந்த தலைவர் வேங்கட பிரதாப், சத்திய சுதாகரன் – துணை தலைவர், சிவசூரிய நாராயணன் – பொதுச்செயலாளர், கௌசல்யா ஜுவைல் – மகளிர் குழுமம் ஆகியோர் சேர்ந்து, தங்களது விழாவினை சிறப்பித்தமைக்காகவும், ஆன்மீக பணிகளை செவ்வையாக செய்தமைக்காகவும்
மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி அவர்களை கௌரவித்தனர்.