தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை” என்ற கவிஞர் கந்தர்வன் கவிதை வரிகளுக்கேற்ப இல்லத்தை மட்டுமின்றி, உலகத்தையும் இயங்கச் செய்யும் ஆற்றல்மிக்க மகளிர் அனைவருக்கும் உங்கள் சகோதரனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் “உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.
இந்நிகழ்ச்சியில், பெண் காவலர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின், மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மகளிர் தின விழாவில் பங்கேற்கிறோம். வாழ்நாள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காக உழைத்தவர் தந்தை பெரியார். நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர். மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் பிறந்தவன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இல்லத்தை மட்டுமல்ல உலகத்தையும் இயக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள். முக்கிய நரகங்களில் புதிதாக 72 கோடி ரூபாய் மதிப்பில் 700 படுக்கைகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும். காஞ்சிபுரம். ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். 24 மணிநேர பாதுகாப்பு வசதியுடன் பெண்களுக்கான விடுதிகள் புதிதாக கட்டப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன்களில் பெண்களுக்கு முன்னுரிமை, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 4.42 லட்சம் மகளிருக்கு ரூ.ரூ.3,190 கோடி வங்கிக்கடன் இணைப்பு. பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம். மகளிர் உயர மாநிலம் உயரும். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கும் பெண்களை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும். ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டம், ஆண்களை போல அனைத்து உரிமையும் பெண்களுக்கு உண்டு. பெண்கள் முன்னேறுவதை பார்த்து கேலி எண்ணும் மனப்பான்மையில் இருந்து ஆண்கள் வெளிவரவேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.