இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் வரும்வாரங்களில் 150 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டிராகன் திரைப்படம் இந்தி மொழியில் வெளியாக இருப்பதை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், டிராகன் படத்தின் இந்தி பதிப்பு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டிராகன் இந்தி பதிப்பு வருகிற 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழை போன்றே இந்தப் படம் இந்தி மொழியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.
