சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது. படத்தின் பாடல் உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ திரைப்படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை கூறியுள்ளார். அதில் ” ரெட்ரோ திரைப்பட டீசரில் வரும் காட்சியை தளபதி படத்தில் வரும் யமுனை ஆற்றிலே பாடலைப் போல் இருக்கிறது என மக்கள் கூறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. சூர்யா சார் மொத்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதேப் போல் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்” என கூறியுள்ளார்.