ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத காட்சியில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. படத்தின் முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கு ஒஜி சம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்பாடல் மிகவும் மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
