கனடிய பல்லினப் பத்திரிகையாளர் கழகத்தின் 2025-2027 இயக்குனர் சபை விபரங்களை கழகம் வெளியிட்டுள்ளது
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மீண்டும் சிரேஸ்ட உப தலைவராகத் தெரிவு
கனடாவில் அதிகளவு பல்லினப் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக் காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் இயக்குனர்கள் ஆகியோரை அங்கத்தவர்களாகக் கொண்ட நன்கு அறியப்பெற்ற ஊடகவியலாளர்கள் கழகமான ‘கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் 2025-2027 காலப் பகுதிக்கான இயக்குனர் சபையின் பெயர் விபரங்கள் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பெற்றுள்ளது.
கழகத்தின் தலைவராக டி கிறிக் மொழிப் பத்திரிகையாளரும் நீண்ட கால அனுபவம் கொண்டவருமான அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பெற்றுள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மேற்படி கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் உறுப்பினராக தமிழ் மொழி சார்ந்து இயங்கிவருபவரான கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் மீண்டும் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவராகத் தெரிவு செய்யப்பெற்றுள்ளார்..
பல்வேறு மொழிப் பத்திரிகைகள் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் அங்கத்துவத்தைக் கொண்ட கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம். கனடாவின் மத்திய மற்றும் மாகாண அரசுகளால் அங்கீகரிக்கப்பெற்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது.
அதன் இயக்குனர் சபை பெயர் விபரங்கள் இங்கு காணப்படுகின்றன