பாகிஸ்தானில் பாதுகாப்படை படையினர் சென்ற ரெயிலை கிளர்ச்சி குழு கடத்தியுள்ளது. 300 பயணிகளை விடுதலை செய்தபோதும், 100 பேரை பணயகைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்படை வீரர்கள் 6 பேரை அவர்கள் சுட்டு கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரெயில் சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்படை படையினர் பயணம் செய்தனா். அப்போது அந்த ரெயிலை பலூச் விடுதலைப் படை ஜாபர் எக்ஸ்பிரஸைக் கடத்தியுள்ளனர். ரெயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயல்பாடு ஆகும். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரெயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ரெயிலை நிறுத்தச் செய்தனர். 100 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளது.
