சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம், ‘கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த இரண்டு பாகங்களும் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் கலகலப்பு 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இது குறித்த அறிவிப்பை நடிகை குஷ்பு சமீபத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, கலகலப்பு 3 படத்தின் பதிவேற்றம் பகிர்ந்துள்ளார். அதாவது, சுந்தர்.சி சார் மதகஜராஜா படத்தின் ஒரு சிறிய பகுதியை வைத்து கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் மதகஜராஜா திரைப்படம் வெளியான பிறகு அந்த திட்டம் மாறிவிட்டது. கலகலப்பு 3 திரைப்படம் அடுத்த ஆண்டுதான் தொடங்க இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
