(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(11-03-2025)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) 12-03-2025 அன்றைய தினம் புதன் கிழமை மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.