கார்கிலில் அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கின் கார்கிலில் அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம்-IV இல் அமைந்துள்ளன. இதனால் இவை அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பல பயனர்கள் சமூக ஊடகங்களில், நகரங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகப் பதிவிட்டுள்ளனர்